Wednesday, December 29, 2010

நான் கல்வியமைச்சரானால்.....!!

+2 கேள்வித்தாள்கள் இப்படித்தானிருக்கும்! (வெளங்கிரும்!)

1.
தமிழ்நாட்டின் ஆட்சிமொழி எது?

(
அ) தமிழ் (ஆ) துளு (இ) பாரசீகம்

2.
கீழே தரப்பட்டுள்ள இரண்டு கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு பதில் அளிக்கவும்

2(
அ).முதுமக்கள் தாழி எனப்படுவது யாது?

2(
ஆ).அண்மையில் தனுஷ்-ஸ்ரேயா நடிப்பில் வெளியான, மூன்றெழுத்துத் திரைப்படம் எது?

(i)
மெட்டி
(ii)
சட்டி
(iii)
பெட்டி
(iv)
குட்டி

3.
கவிப்பேரரசு வைரமுத்துவின் பணி எது?

(
அ) புல் வெட்டுவது
(
ஆ) பஞ்சர் ஒட்டுவது
(
இ) ஊதுபத்தி விற்பது
(
ஈ) கவிதை எழுதுவது

4.
திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால் தவிர மூன்றாவது பால் எது?

(
அ) இன்பத்துப்பால்
(
ஆ) மசாலா பால்
(
இ) ஆவின் பால்

5.
முக்காலிக்கு மொத்தம் எத்தனை கால்! (தோராயமாகச் சொல்லவும்)

6.
கடியாரத்தில் பெரிய முள் 12-லும் சிறிய முள் 5-லும் இருந்தால் எத்தனை மணி? (4-க்கும் 6-க்கும் இடைப்பட்ட எண்)

7.
ஆறுபடை வீடுகள் மொத்தம் எத்தனை?

8.
தென்னகத்தின் வடபகுதியில் வசிப்பவர்களை எவ்வாறு அழைக்கிறோம்?

(
அ) வட இந்தியர்கள்
(
ஆ) பஜ்ஜி இந்தியர்கள்
(
இ) போண்டா இந்தியர்கள்

9.
எது பல்குத்த உதவும்?
(
அ) துரும்பு (ஆ) கரும்பு (இ) இரும்பு

10.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
(
அ) மன்னார்குடி (ஆ) மாமண்டூர் (இ) மதுரை

No comments:

Post a Comment