கடவுளை நேரில் காண
அனுமதி கிடைத்தது
குறிப்பிட்ட நேரத்தில்
குளித்து விட்டு சென்று இருந்தேன்
சிப்பந்தி சொன்னார்
கடவுள் தெய்வத்தை
வணங்கி கொண்டு இருக்கிறாரென்று
கடவுளுக்கே தெய்வமா ? யாரென்று
அறிய எட்டிப் பார்த்தேன்
கடவுள்
சாஷ்டாங்கமாய் விழுந்து
வணங்கிகொண்டிருந்தார்
தன் தாயை
விரைந்தேன்
வீட்டுக்கு
என் தெய்வத்தை காண....
No comments:
Post a Comment