சன்னமான குரலில் தொடர்ந்து
ஒரு சிறுமி கத்துவதை
ஜன்னலில் இருந்து
எட்டி பார்த்துவிட்டு
வெளியே வந்தேன் -
அருகிலிருந்த அனாதை
ஆசிரமத்தின் கேட்டை
பிடித்து கதறிகுக்கொண்டிருந்தாள் - அந்த
அனாதைப் பெண்
அடுத்த பத்தடி தூரத்தில்
கட்டிடத்தின் சுவரில் சாய்ந்து
குத்துக்காளிட்டு தரையில்
உட்கார்ந்து இருந்தாள் - அந்த
பரிதாப தாய்
அந்த சிறுமியை விட
அதிகமாக
அவள் மனதுக்குள்
அழுதது கேட்டது - எனக்கு
உறவுகளை இழந்து
அனாதை ஆவது வேறு -
உறவுகளை விட்டு
அனாதை ஆவது வேறு
முன்னது விதி
பின்னதும் விதியே - ஆனால் அது
இறைவனின் சதியே...
ஒரு கோணத்தில் இங்கே
அனைவருமே அனாதைகளே -
மற்றொரு கோணத்தில் இங்கே
எவருமே அனாதைகளல்ல
இதை ஏற்கவும் இயலாமல்
இழக்கவும் முடியாமல் என்னை
அங்கிருந்து அகற்ற முயற்ச்சிதேன்
என் இயலாமையை
மறைத்துக்கொண்டு
இருந்தும் தோன்றியது
இரண்டு விஷயங்கள்...
ஒன்று
ஆண்டவன் என்று
ஒருவன் இருந்து
அவன்தான் இதெற்கெல்லாம்
காரணமென்றால் - அவனை
செருப்பால் அடிக்கவேண்டும்
தெருவில் நிறுத்தி
இரண்டு
வீட்டிற்கு சென்று
என்னை நானே
அடித்துக்கொள்ளவேண்டும் - அதே
செருப்பால்
பின்னதை நான்
செய்து கொள்கிறேன் - முன்னதை
யாராவது செய்வீர்களா?...
ஆண்டவன் மனிதனின் கர்ப்பனை.
ReplyDeleteசெருப்பை வீணாக்க வேண்டாம்.அந்த தாய்க்குத் தேவை ஆறுதல் வார்த்தைகள், முடிந்தால் சிறு உதவிகள்.முடிந்தவர்கள் ஒரு குழந்தைக்கு உதவினால் அனாதைகள் முன்னேறி விடுவார்கள். பன்னாட்டுக் குழந்தைகள் அமைப்பு இதைச் செய்கிறது.ஏன் நீங்கள் ஆரம்பிக்கக் கூடாது. Children s International.
இதையேதான் நானும் கேட்கிறேன்.
ReplyDeleteஇந்த நிலைமைகள் காணாமல் போகும் நாள் எங்கே எப்போது எப்படி உருவாகும்?
கேள்விகளை உம்மிடமே கேட்டுபாரும்,
ReplyDeleteபதில் Anonymous சொல்லியதாக இருந்தால்,
அந்த நொடியிலிருந்தே இந்த நிலைமைகள் மாற தொடங்கும்..........,
வாயால் வடை சுட்டிருக்கும் வள்ளுவரே,
ReplyDeleteஅந்த தாய்க்குத் தேவை ஆறுதல்,
அந்த குழந்தைக்குத் தேவை உதவி,
அதைச் செய்திருந்தால் அவர்களுக்கு
நீங்கள்தான் கடவுள்...! -ஆனால்
அதற்க்கான முயற்சி கூட நீங்கள் எடுக்கவில்லை.
இப்போது தண்டனைகள் தரவேண்டுமென்றால்
இரண்டையும் உங்களுக்குதான் தர வேண்டும்...!