Thursday, March 10, 2011

காதலித்து பார் - வைரமுத்து

காதலித்து பார்,
உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்,
உலகம் அர்த்தப்படும்,
ராத்திரியின் நிளம் விளங்கும்,
உனக்கும் கவிதை வரும்,
கையெழுத்து அழகாகும்,
தபால்காரன் தெய்வம் ஆவான்,
உன்பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்,
கண் இரண்டும் ஒளிகொள்ளும்,
காதலித்து பார் ...

தலையணை நனைப்பாய்,
முன்று மூறை பல் துலக்குவாய்,
காத்து இருந்தால் நிமிசங்கள் வருஷம் என்பாய்,
வந்துவிட்டால் வருசங்கள் நிமிசம் என்பாய்,
காக்கை கூட உன்னை கவனிக்காது ,
ஆனால் இந்த உலகமே உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்,
யிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை ஒன்று

உருளக்
காண்பாய்
இந்த வானம்,இந்த அந்தி,இந்த பூமி,இந்த பூக்கள் எல்லாம்
காதலை கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்,
காதலித்து பார்...

இருதயம் அடிக்கடி இடம் மாறி துடிக்குமே ,
நிசப்த அலைவரிசைகளில் உனது
குரல் மட்டும் ஒளிபரப்பாகும்,
உன் நரம்பிலே நாண் ஏற்றி,

உனக்குள்ளே அன்பு விடும்,
காதலின் திரைச்சிலையை காமும் கிழிக்கும்,
ஹார்மோன்கள் நைல்நதியாய் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சஹாராவாகும் ,
தாகங்கள் சமுத்திரமாகும்
பிறகு கண்ணீர் துளிக்குள் சமுந்திரம் அடங்கும்,
காதலித்து பார்
...



2 comments:

  1. வைரமுத்துவின் வரிகளை அப்படியே போட்டுவிட்டீர்கள், உங்களின் கருத்தையும் அனுபவத்தையும் சொனால் தானே பதிவு அழகாகும்

    ReplyDelete
  2. அவரின் அனுபவத்தை தான் வைரமுத்து கவிதையாக எழுதியிருக்கலாம்

    ReplyDelete