அதேசமயம் முதல் நாளிலேயே உறவு வைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. மன ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி முதலிரவு நாளன்று உறவு வைத்துக் கொள்வதில் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதால் அன்றைய தினம் தவிர்ப்பது என்பதும் நல்ல விஷயம்தான் என்கிறார்கள் டாக்டர்கள்.
குறிப்பாக, பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணம் என்று வரும்போது, அந்த மணமகனும் சரி, மணமகளும் சரி அதற்கு முன்பு வரை பார்த்திருக்க மாட்டார்கள், பேசியிருக்க மாட்டார்கள், இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படிப்பட்ட நிலையில் ஒருவிதமான இறுக்கமான மன நிலையுடன்தான் இருவரும் தனியறையில் சந்திக்கிறார்கள். எனவே முதலில் இருவருக்குள்ளும் இருக்கும் இடைவெளியை இட்டு நிரப்பி, அன்னியோன்யத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்த முதலிரவைப் பயன்படுத்தலாம் என்பது டாக்டர்கள் மட்டுமல்லாமல், மன நல மருத்துவர்களின் அறிவுரையும் கூட.
மேலும், திருமண நாளன்று மணமகனும், மணமகளும் படு பிசியாக இருப்பார்கள். போட்டோவுக்குப் போஸ் கொடுப்பது, உறவினர்கள், நண்பர்களின் பாராட்டுக்கள், வாழ்த்துகளை ஏற்பது என்று பிசியாக இருக்கும் அவர்களிடம் நிறைய அசதிதான் மேலோங்கியிருக்கும். எனவே முதல் நாள் இரவை ஓய்வாக கழிப்பதும் நல்ல விஷயம்தான்.
இன்னொரு முக்கிய விஷயம், முதல் நாளன்றே உறவு கொள்ள ஆர்வப்பட்டு, அதில் ஏதாவது குழப்பமாகி, கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ, தனது பார்ட்னர் மீதான திறமை குறித்த அவ நம்பிக்கை வந்து விடும் வாய்ப்புகளும் நிறையவே உள்ளதால், முதல் உறவை, பதறாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
அது முதல் இரவோ அல்லது மூன்றாவது இரவோ, எதுவாக இருந்தாலும் உறவு என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. இருவரும் இணைந்து தொடங்கப் போகும் இல்லற வாழ்க்கையில், செக்ஸ் மட்டும்ல்லாமல் அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன. எனவே அனைத்தையும் சிறப்பாக தொடங்க அருமையான, அழகான அடித்தளம் தேவை. அதை ஆற, அமர திட்டமிடுவதில் தவறு இருக்க முடியாது.
அதற்காக முதலிரவு நாளன்று, படுக்கை அறையில் உட் கார் ந்து கொண்டு, அங்க பிளாட் வாங்கலமா, இங்க வீடு கட்டலாமா, எந்தக் கார் வாங்கலாம் என்ற ரீதியிலான ஆலோசனைகளில் மட்டும் தயவு செய்து குதித்து விடக் கூடாது.
செக்ஸ் உறவு என்பது இருவருக்கும் இடையிலான அன்னியோன்யத்தைப் பொறுத்தது என்பதால், இருவரது மனங்களும் ஒன்றாக இணைந்து, இன்பத்துடன் தொடங்குவது என்பது முக்கியமானது.
அதேசமயம், ஏற்கனவே அறிமுகமாகி, திருமணத்திற்கு முன்பே உடல் ரீதியாகவும் இணைந்து பின்னர் திருமணத்தில் ஐக்கியமாவோருக்கு இந்த காத்திருப்பு தேவைப்படாது.
அடிவயிற்றுக்குள் பட்டாம் பூச்சி படபடக்க முதலிரவு அறைக்குள் நுழையும்போது மனம் பூராவும் மகிழ்ச்சி சிறகடிக்கும். அந்த மகிழ்ச்சி இருவருக்குள்ளும் நீடித்து நிலைக்கும் வகையில், திருமண உறவு செழிப்பாக இருக்கும் வகையில், உங்களது முதல் உறவை அமைத்துக் கொண்டால்
சரிதான்.
நன்றி : தட்ஸ்தமிழ்
No comments:
Post a Comment