யுத்தம் செய் - சரியென்றால்
என் அண்ணன் செய்ததில் தப்பென்ன
'துன்பியல் சம்பவம்'
- ஓர் இந்தியனாக தவறு
- ஓர் தமிழனாக சரி
- ஓர் இத்தாலியின் அன்னையாக தவறு
- ஓர் பாதிக்கப்பட்ட தங்கையாக சரி
ஈழம் - நெஞ்சில் ஈரமில்லதவர்களால் சிதைக்கப்பட்டது
ஆனால் புதைக்கப்படவில்லை
களத்தை இழந்தாலும் காரணம் எஞ்சியருக்கிறது.
என் அண்ணனின் தம்பியே
சீ மானே என்றழைக்காமல் - உன்னை
சீமானே என்றழைக்கவைத்தவனே
எங்களின் கடைசி நம்பிக்கையே
நீ மட்டும் பொய்த்து விட்டால் - நானும்
நாத்திகனாக மாறிவிடுவேன்
கடவுளை கூட நம்ப மாட்டேன் - என் உயிர் உள்ளவரை
ஈழத்தமிழரிடம் எஞ்சி இருப்பது
கண்ணீரும் காரணமும் மட்டுமே
ஓடி ஒளியாமல்,
துப்பாக்கி தோட்டவை முத்தமிட்டவனே
நீ மாவீரன் - ஆனால் நாங்கள்
மாகோழைகள்
வெந்ததை தின்று உயிர் வாழ்கிறோம்
சில முத்துகுமார்கள் மட்டும் இங்கே விதிவிலக்கு
No comments:
Post a Comment