எம்.ஜி.ஆர்,
கருணாநிதி,
முன்னவர் அள்ளிக் கொடுத்தார்,
அனைத்துக்கொண்டனர்.
பின்னவர் கிள்ளிக் கொடுத்தார்,
தள்ளி விட்டனர்.
என் அண்ணன் மட்டும்
நேரு விளையாட்டரங்கில்
பாராட்டு விழா நடத்தி இருந்தால்
சகோதர யுத்தம் - தற்காப்பு யுத்தமாக மாறியிருக்கும்.
ஸ்பெக்ட்ரம் சி.பி.ஐ ரைடு போல இயல்பாக நடப்பது தானே என்றிருப்பார்,
சேகுவேரா பட்டம் இயல்பாகவே கிடைத்திருக்கும்.
அவன் என்ன நடிகர் சங்க தலைவரா
பாராட்டு விழா நடத்துவதற்கு
அவன் பாராட்டு போராளிக்கு தானே தவிர
கோமாளிக்கு இல்லை.
ஆம் கோமாளிதான்
காலை சிற்றுண்டிக்கும், தேநீர் இடைவேளைக்கும்
இடையில் உண்ணாவிரதம் இருப்பது கோமாளித்தனம் தானே.
இங்கு எஞ்சி இருப்பது கோமாளி யார் என்பது தான்
நடத்தும் அவனா, பார்க்கும் நாமா.
எங்களை
கர்நாடகாவில் அடித்தாலும்,
கடலில் சுட்டாலும்,
முல்லை பெரியாரை அடைத்தாலும்,
காவிரியை மூடினாலும்,
சொரனையற்ற நாதிகளாக இருக்க பழகிவிட்டோம்.
திரையை உயிராக மதிக்கும் நாங்கள்
உயிரை மயிராக பார்க்க பழகிவிட்டோம்.
ஏனென்றால் நாங்கள் வாழும் சூழல் (சமூகம்)
எங்களை வாட்டும் சூழல் (குடும்பம்) - இரண்டும்.
ரூபாய்க்கு 1 படி அரிசி என்றார்கள் -
காமராஜரை தோற்கடித்தோம்.
அது எங்களுக்கு நாங்களே போட்டு கொண்ட வாய்க்கரிசி
அதன்பிறகு நாங்கள் ஏணிப்படியில் ஏறவே இல்லை.
இலவச தொலைக்காட்சி
இலவச கேஸ்
இலவச மின்சாரம் - எல்லாமே இலவசம்
மன்னராட்சியில் கூட இல்லாதது மக்களாட்சியில்.
அதுபோல,
டாட்டா பிர்லாக்களுக்கு - 2G, 3G ஒளிக்கற்றை
இலவசம் - தலைவரின் இரண்டாம் வீட்டுக்கு
படியளந்த பிறகு.
தொடரும்...
No comments:
Post a Comment