காதல் கவிதைகள் - II
என் காயம் பார்த்து
அழும் போதும் ,
காதல் சொல்லத்
தயங்கும் போதும் ,
உறுதிப்படுத்துகிறாய்...
அழுகையும் வெட்கமும்
ஆண்களுக்கும்
உண்டென்று !
----------------------யாரோ
நான் உதிரத்தில் எல்லாம்
உனக்கு
கவிதை எழுத மாட்டேன்
உயிரில்
எப்படி எழுதுவது
என்றுதான் யோசித்து கொண்டு இருக்கிறேன்
----------------------யாரோ
பத்து விரல்கள் என்பது சரிதான்
எப்போது
உன்னுடைய ஐந்து விரல்களும்
என்னுடைய ஐந்து விரல்களும்
---------------------- பூமா ஈஸ்வரமூர்த்தி
No comments:
Post a Comment