காதல்
எழுத்துக்களால் அடுக்க முடியாத வார்த்தை !
வார்த்தைக்குள் அடக்க முடியாத அர்த்தம் !
அர்த்தம் இன்றிப் பேசமுடிந்த பாஷை !
பாஷை என்ற ஓசை நசுங்கி , உயிர் பிதுங்கும் மௌனம் !
மௌனத்தை எப்படி வரைவது ? அது உணர்வது !
-------- ரா.பார்த்திபன்
மழையை பிடிக்காதவர்கள் யார். மழைக்குப்
பிடிக்காதவர்கள் யார்.
காதல் வேறு...மழை வேறா!
-------- யாரோ
மேல் இமைகளில்
நீ இருக்கிறாய்
கீழ் இமைகளில்
நான் இருக்கின்றேன்.
இந்த கண்கள் கொஞ்சம்
தூங்கி விட்டாலென்ன
-------- அறிவுமதி
இந்த துக்கம்
எனக்கு பிடித்தது
காரணம்
இது
நீ தந்தது
-------- ஓர் உருது கவிஞன்
No comments:
Post a Comment