Wednesday, March 9, 2011

மகளிர் தினக்கொண்டாட்டம்

மகளிர் தினக்கொண்டாட்டம்
அலுவலக

மொட்டை மாடியில்


பெண்கள் சிலரும்

ஆண்கள் பலருமாய்

கோலாகலமாய் தொடங்கியது

விழா


அருகே சில

அங்கிள்கள் அமர்ந்திருக்க - அது

ஜங்கிளை நினைவுபடுத்தியது


ஆண் சிங்கங்களின் பாதுகாப்பில்

பெண் சிங்கங்களா !


சிங்கிளாக இருப்பதில்

சிறப்பென்ன இருக்கு - பிறருடன்

மிங்கிள் ஆவதே பெண்மையின்

சிறப்பென்பதை உணர்த்தியது அது


விண்வெளிக்கு சென்று வந்துவிட்ட பிறகு
ம் - எவனாலும்
பெண்களின் கண்வெளியை நேருக்கு நேர்

சந்திக்க முடிவதில்லையே - ஏனோ


இந்த

பூமியும்
பெண்களும் எப்போதும்
புதிதாய் தோன்றக்

காரணம் இந்த

ஈர்புத்தானோ !

இன்று பெண்கள் தினம்

என்று (எப்பொழுது) ஆண்கள் தினம்

எதிர் வினா எழுப்பினேன்

ஏதிரிளிருந்த நண்பரிடம்

இயல்பாய் சொன்னார்

இன்று ஒரு நாள்

பெண்கள் தினம் - மீதி அனைத்தும்

ஆண்கள் தினம் என்று


கேள்வி பதில் நடத்தி

தங்கத்தை பரிசளிக்கலாம்

என்று சிலர்

கிராஸ் பேனாவினால்
எழுதினர் பதிலை - நாங்கள் அந்த இடத்தை
கிராஸ் செய்யும் வரை நடத்தவே இல்லை

தங்கமில்லையா - அல்லது கேள்வியை

தாங்க ஆளில்லையா


விழா நடந்தது - என்ன

நடந்ததென்பது

அவர்களுக்கும் தெரியவில்லை

எங்களுக்கும் தெரியவில்லை - வந்தார்கள்
அனைவரும் பரிசுத் தட்டோடு

இது தான்

மகளிர் தினக் கொண்டாட்டமா
இப்படி செய்தால்
மகளிக்கு உயர்வு வந்துவிடுமா ?


கேள்விகள் துரத்தின

பதிலை தேடி


எதுவுமே புரியவில்லை


வீட்டிற்க்கு சென்று

அம்மாவிடம்

அலைபேசியில் பத்து நிமிடம்

பேசி விட்டு படுத்தேன்


பதில் பாதி புரிந்தது

-
ஸ்ரீதர்

2 comments:

  1. புரிந்த பதிலை பகிர்ந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  2. இந்த உலகத்துல பொண்ணுங்கள முழுசா புரிஞ்சிகிட்டவன் எவனும் இல்லடா.
    ஸ்ரீதர்க்கு இப்போ புரிஞ்சிருக்கற பாதி பதில் தப்போன்னு இன்னும் கொஞ்ச நாள்ல தெரியவரும் !!!

    ReplyDelete