Wednesday, March 23, 2011

ஆத்தா

அம்மாவைப் பெற்ற அம்மாச்சி. காலையில்
இருந்து இரவு வரையிலும் தினசரி ஒரு பூ
பூத்தபடியிருப்பது அபூர்வம் என்றால், அவளும்
அபூர்வம் தான். காது வளர்த்து, தண்டட்டிகளாடக்
கல்யாண வீடுகளில் நிறைய சாப்பிட்டு ,
வெற்றிலை போட்டு, உதட்டில் விரல் மூடிக் காவி
நீர்
மிழ்ந்தால், ஒரு பாகம் சென்று விழும்.
அவளவு வலுவும் வீரியமும் மிக்கவள். நேர்
மாறாக,பிள்ளை மனசு. யார் அழுதாலும்
எதற்கென்று கேட்காமல்,தானும் அழுவாள்;
அலுபவளைவிட அதிகமாகவும் உண்மையாகவும்.
- கந்தர்வன்
(
கந்தர்வன் கதைகள் தொகுப்பில் இருந்து)


ஆனந்த விகடனில் இதை படித்தபோது எனக்கு தோன்றியது , இப்போது ஆத்தாவை அறியாத ஒரு தலைமுறை உருவாகிக்கொண்டு இருக்கிறது. இரண்டாம் வகுப்புபாட புத்தகத்தில் "Grand Mother" என்று ஆத்தாவை அறிந்து கொள்கிறான் .பழகி தெரிந்து கொள்ள வேண்டியதை படித்து
தெரிந்து கொள்கிறான்.

பாட்டி வடை சுட்ட கதையை கூட , பாட்டியின் வாயால் சொல்வதை விடுத்தது தொலைக்காட்சியில் போட்டு காட்டிகொண்டிருக்கிறோம். முதியோர் இல்லங்கள் பல்கி பெருகிக் கொண்டிருக்கின்ற இன்றைய காலக்கட்டத்தில் உறவுகளின் அருமையை இளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அவர்களின் அனுபவ அறிவுக்கு முன்னால் நம்முடைய பட்டறிவு
மண்டியிட வேண்டும் என்பதே நிதர்சன உண்மை...


என்னைப்

பெத்தவளின்
மடியில்
தூங்குவது
சுகம் - அதனினும் சுகம்
அவளை

பெற்றவளின்
மடியில்
துங்குவதும்


No comments:

Post a Comment