தலையை வெட்டுவேன் என்றவனின்
தலைவனும் - அந்த
தலைக்கு சொந்தக்காரனும்
கூட்டணி அமைத்திருக்கிறார்கள்
பேரனின் திருமண அழைப்பிதழ்லோடு
பேரத்தை முடித்து இருக்கிறார்கள்
அரசியல்வாதிகளின் பேரன்களும்
அரசியலுக்கு பயன்படுகிறார்கள் - வேண்டியபோது மட்டும்
குடிகாரன் என்று சொன்னவளும்
குந்தி ஊத்தி கொடுத்தாளா என்று கேட்டவனும்
கூட்டணி அமைத்திருக்கிறார்கள்
குடும்ப ஆட்சியை ஒழிப்பேனன்று
கையுடன் இணைய நினைப்பவனை
கைது என்று சொல்லி
கதர்சட்டைக்காரர்கள்
கண்ணியத்தோடு கூட்டணி பேசுகிறார்கள்
ஆட்சியை ஒழிப்பேனன்று
ஆட்டத்தோடு நடைபயணம் சென்ற புயல்
நடையாய் நடக்கிறது கூட்டணி வேண்டி
வலுவிழந்துவிட்டதா
திமிறி எழு என்று சொன்ன
திருமா அடங்கிக்கிடக்கிறார்
இரண்டு இலக்க எண்ணிக்கைக்கு
இயங்கி கொண்டிருக்கிறார்
இலங்கை பயணத்திற்கு இடையில்
கேட்டால் - இது
கொள்கை கூட்டணியல்ல
தேர்தல் உடன்படிக்கை என்று
நியாயவாதம் பேசுகின்றனர்
கள்ளுக்கும்
காந்தி நோட்டுக்கும்
கைநீட்டும்
கணவான்கள் இருக்கும் வரை
எதுவும் பேசலாம்
யாரும் ஆளலாம்
தமிழகத்தை....
என்னை மிகவும் கவர்ந்தன அந்த கடைசி வரிகள்.
ReplyDelete