Wednesday, May 11, 2011

எந்தாயி...!


வேலைக்கு போயிட்டு வந்து
அக்கடான்னு நீ உக்காரையில
ஃபீஸ் கட்டணும்பேன்
ஒடனே முந்தான முடிப்புலருந்து
ரூவா தருவியே அதுக்காகவாவது,

ஊர சுத்திட்டு நான் வரைல
நீ சாப்பிடரத பாத்து
உன் தட்ட புடுங்கிட்டு
வேற போட்டுக்கோம்பேன்
நாஞ்சாப்பிட வரைல சும்மா இருந்திட்டு
அப்பறம் சொல்லுவியே
சாப்பாடு முடிஞ்சிதுன்னு அதுக்காகவாவது,

கண்ணாடி பாத்து நாந்தல சீவயில
பின்னாலிருந்து திடும்னு தலைக்கு
எண்ண தேச்சு விடுவியே அதுக்காகவாவது,

வீட்டுல கறி சமைச்சா யாருக்கும் தெரியாம
சோத்துக்குள்ள மறச்சு ரெண்டு துண்டு
அதிகந்தருவியே அதுக்காகவாவது,

ராவுல நான் குளிருல
நடுங்கையில கேக்காமலே
போத்தி விடுவியே அதுக்காகவாவது
இன்னொருக்கா ஓன்வகுத்துலயே
பொறக்கோணுந்தாயி ...!

4 comments: