Monday, August 15, 2011

நிலா

உலகை இன்று ஆளும் புதிய தலைமுறை
நிலவில் கொண்டாடும் கோடை விடுமுறை
வளரும் விஞ்ஞானம் புதிய நெறிமுறை
வானவேளியாவும் எங்கள் வகுப்பறை
- (உலகை)

நீலவட்டப் பாதையிலே ஆலவட்டப்
போடும் இந்த நிலா அது
ஓரிடத்தில் நில்லாதது..
பாடுபட்டு மானிடர்கள் பார்த்து
வந்த சங்கதிகள்
காவியத்தில் சொல்லாதது
காவியத்தில் சொல்லாதது..
- (உலகை)

நிலவை விழுங்குமாம் பாம்பு
அந்த பழைய கதையேதும்
இனி செல்லாது..
அப்பம் சுட்டு நிலவில் விற்கும்
அவ்வை பாட்டியேது
ஆம்ஸ்ட்ராங்கை கேளு
நீள் ஆம்ஸ்ட்ராங்கை கேளு..
கரடு முரடான வழியும்
துளி காற்றும் இல்லாத வெளியும்
கடன் வாங்கி முகம் காட்டும் மொழிழும்
கவிதை பொய்யென்று புரியும்
கவிதை பொய்யென்று புரியும்..
- (உலகை)

--
நன்றி
தூர்தர்ஷன் தொலைக்காட்சி


4 comments:

  1. அவ்வை பாட்டியேது
    ஆம்ஸ்ட்ராங்கை கேளு
    இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  2. Can you send me the YouTube link to this song? Its been really long since i heard it

    ReplyDelete
  3. யாராச்சும் தயவு செய்து இந்த பாட்டு டவுன்லோட் பண்ண வழி சொல்லுங்களேன்.. இல்லாட்டி ஒரு தடவ கேக்கவாசும் ஐடியா சொல்லுங்க.. ப்ளீஸ்

    ReplyDelete
  4. I love this song from childhood, anybody have a mp3 link pls share me

    ReplyDelete